
செய்திகள் மலேசியா
வழக்கறிஞர் ம.மதியழகனின் "வழக்குகளில் என் பயணம்": நூல் வெளியீடு
ஈப்போ:
பேராக் தமிழர் திருநாள் இயக்கத்தின் ஏற்பாட்டில் வரும் 23.8.2025 (சனிக்கிழமை), மாலை மணி 4.30 க்கு ஈப்போ புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் (சுங்கை பாரி வழி) வழக்கறிஞர் ம.மதியழகனின் " வழக்குகளில் என் பயணம்" நூல் வெளியீடு செய்யப்படவுள்ளதாக நூலாசிரியர் வழக்கறிஞர் ம. மதியழகன் கூறினார்.
இந்நிகழ்வை முன்னிலை செய்து நூலை வெளியீடு செய்கிறார் மலேசிய சட்டத்துறை துணையமைச்சர் எம்.குலசேகரன்.
இந்நிகழ்விற்கு வருகையளித்த அனைவருக்கும் இந்நூல் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்நூலை ஆய்வு செய்து, நூலை அறிமுகம் செய்கிறார் பூஜாங் பள்ளத்தாக்கு குறித்து ஆய்வு செய்த கெடாவின் வழக்கறிஞரான டத்தோ வி.நடராஜா என்பதனை அவர் தெரிவித்தார்.
கடந்த 40 வருடங்களாக வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, இதன் வாயிலாக இந்திய சமூகத்தினர் இந்நாட்டில் சட்ட அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்க்காக இந்நூல் வெளியீடு செய்வதாக அவர் சொன்னார்.
இந்திய சமூகத்தினரின் அலட்சிய போக்கால் சட்ட விவகாரங்களில் பல வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, இந்திய வாழ் மக்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அன்போடு அழைக்கப்படுகின்றனர்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 6:23 pm
2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் சேர்த்துக் கொள்ளப்பட்டது: ஹன்னா இயோ
August 14, 2025, 6:22 pm
அரச மரத்து விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கட ஹர சதுர்த்தி விழா
August 14, 2025, 6:21 pm
ஷாரா மரண வழக்கின் விசாரணை அதிகாரிகள், மேற்பார்வையாளர்களிடம் புக்கிட் அமான் விசாரணை
August 14, 2025, 5:25 pm
மகன் தாக்கப்பட்ட சம்பவம்; ரபிசி, அவரின் மனைவி உட்பட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன: போலிஸ்
August 14, 2025, 5:23 pm
மாணவி சர்வினா பள்ளியில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் எம்ஏசிசியில் புகார்
August 14, 2025, 4:19 pm