நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குறை சொல்வதை நிறுத்திக் கொண்டு இந்திய முஸ்லிம் ஒற்றுமையாக சாதிக்க வேண்டும்: டத்தோ வீரா ஷாகுல்

கோலாலம்பூர்:

குறை சொல்வதை நிறுத்திக் கொண்டு இந்திய முஸ்லிம் ஒற்றுமையாக சாதிக்க வேண்டும்.

முக்மின் பிரதிநிதியும் கிரீன் பேக்கேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநருமான டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.

துபாயில் பல்வேறு தொழில் துறைகளில் சாதித்து வரும் வர்த்தக ஜாம்பவான் ஹாஜி செய்யது சலாஹுதீன் மலேசியா வந்துள்ளார்.

அவருடன் சேர்ந்து 11க்கும் மேற்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த வர்த்தக சாதனையாளர்கள் மலேசியா வந்துள்ளனர்.

இச் சாதனையாளர்களை ஒருசேர சந்திப்பதுடன் அவர்களை கௌரவிக்கும் நோக்கில் இன்றைய விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

காரணம் உலக ரீதியில் உள்ள இந்திய முஸ்லிம் மக்கள் இங்கு ஒன்றுகூடி உள்ளனர்.

இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் இந்த ஒற்றுமை மிகவும் முக்கியமாகும். குறிப்பாக வர்தகர்களிடையே தொடர்புகள் முக்கியமானவை.

காரணம் சாதிக்கும் சமுதாய மக்களை வாழ்த்துவதுடம் குறை கூறும் சம்பவங்கள் தான் இன்று அதிகம் உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.

இந்திய முஸ்லிம் சமூகம் குறை கூறுவதை நிறுத்திக் கொண்டு ஒற்றுமையாக சாதிக்க வேண்டும். முன்னேற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

குறிப்பாக இந்திய முஸ்லிம் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்றால் அது அவர்களின் தவறு அல்ல. சமுதாயத்தின் தோல்வியாகவே நான் பார்க்கிறேன்.

ஆக இந்திய முஸ்லிம் சமூகம் ஒருவரைக்கொருவர் கைவிட்டுவிடாமல் மற்ற சமூக மக்களைப்போல் கை தூக்கி விட்டு வாழ்க்கை முன்னேற வேண்டும்.

அதே வேளையில் துபாயில் இருந்து வந்துள்ள நமது தொப்புள் கொடிகளுடனான உறவு இன்றுடன் முடிந்து விடக்கூடாது. ஆண்டுதோறும் தொடர வேண்டும்.

இந்த உறவு மேலும் வலுப் பெற வேண்டும் என டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset