நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதினிடம்  மன்னிப்பு கேட்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை; ஆனால் எம்சிஎம்சி விசாரணைக்காகக் காத்திருங்கள்: பிரதமர்

கோலாலம்பூர்:

அந்நிய நாட்டவர்களுக்கு மானியங்கள் வழங்குவதை தேசியக் கூட்டணி தலைவர் ஆதரித்தார் என்ற கூற்று தொடர்பாக அதன் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசினிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளேன்.

ஆனால்   குறிப்பிடப்பட்ட தகவலின் ஆதாரம் போலியானதா அல்லது வேறுவிதமா என்பதைத் தீர்மானிக்க எம்சிஎம்சி விசாரணையின் முடிவுகளுக்காக இன்னும் காத்திருப்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உண்மையான ஆதாரம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அது ஒரு தவறு என்றா; எனக்கு மன்னிப்பு கேட்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

1,2,3 உண்மையானதா என்பதை விசாரிக்கவும், உண்மையானதாக இல்லாவிட்டால், அந்த அறிக்கை உண்மையில் உண்மையல்ல என்பது நிரூபனமாக வேண்டும்.

அதற்கு எம்சிஎம்சியின் முடிவுக்காகக் காத்திருங்கள்.

உலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ரோசால் வாஹித் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset