நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏவில் 229  அந்நிய நாட்டினரின் நுழைவு மறுக்கப்பட்டது: எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனம் அதிரடி

சிப்பாங்:

எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனத்தின் அதிரடியால் கேஎல்ஐஏவில் 229 அந்நிய நாட்டினரின் நுழைவு மறுக்கப்பட்டது.

24 மணி நேர ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 229 அந்நிய நாட்டினருக்கு இந்த மறுப்பு வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி இன்று காலை 7.30 மணி வரை கேஎல்ஐஏ 1,  2 ஆம் முனையங்களின் சர்வதேச வருகை,  புறப்பாடு பகுதிகளில் இந்த நடவடிக்கை தொடங்கியதாக அந்நிறுவனம் அறிவித்தது.

இதில் 764  அந்நிய நாட்டினரிடம் சோதனை செய்யப்பட்டது.

மொத்தத்தில், 229 பேர் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியது கண்டறியப்பட்டது.

வங்காளதேசத்தைச் சேர்ந்த 204 பேர், இந்திய நாட்டைச் சேர்ந்த 14 பேர், இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேசியாவைச் சேர்ந்த தலா மூன்று பேர், கம்போடியாவைச் சேர்ந்த இரண்டு பேர் என அமலாக்க நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset