நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாயை மூடு, தொடர்ந்தால் உனக்கு எய்ட்ஸ் வரும்: ரபிசியின் மனைவிக்கு மிரட்டல்

கோலாலம்பூர்:

12 வயது மகன் தாக்கப்பட்ட பிறகு, தனது மனைவிக்கு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்தார்.

ஒரு செய்தியில் எனது மகனுக்கும் எய்ட்ஸ் தொற்று ஏற்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

வாயை மூடு, நீ தொடர்ந்தால் உனக்கு எய்ட்ஸ் வரும் என்று அந்த  செய்தியில் எழுதப்பட்டிருந்தது.

இன்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி கூறினார்.

நேற்று, புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில்  தனது மகன் காரில் ஏறும் போது, அடையாளம் தெரியாத ஒரு நபர் தனது மகனை இழுத்து ஹைப்போடெர்மிக் ஊசியால் குத்தியதாக ரபிசி தெரிவித்தார்.

குறிப்பாக சில பிரச்சினைகள் குறித்து பேசக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாக இந்த தாக்குதல் இருப்பதாக அவர் நம்புகிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset