நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசி மகன் மீதான தாக்குதலை தேசியக் கூட்டணி கடுமையாகக் கண்டிக்கிறது: தக்கியூடின்

கோலாலம்பூர்:

புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியின் மகன் மீதான தாக்குதலை தேசியக் கூட்டணி  கடுமையாகக் கண்டிக்கிறது.

தேசியக் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டத்தோஶ்ரீ தக்கியுடின் ஹசான் இதனை கூறினார்.

பல பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டாம் என்ற எச்சரிக்கையாக இந்தத் தாக்குதல் நடந்ததாக ரபிசி கூறியது உண்மை என்றால், அது நாட்டின் அரசியல் களத்தில் ஒரு இருண்ட வளர்ச்சியைக் குறிக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்றால், நாட்டின் ஜனநாயகக் களத்திற்கு மிகவும் ஆரோக்கியமற்ற, ஆபத்தான குண்டர் அரசியலின் வளர்ச்சியைக் குறிக்கிறது.

அரசியல் கருத்துக்களில் உள்ள வேறுபாடுகளை அச்சுறுத்தல்கள், உடல் ரீதியான வன்முறையாக மொழிபெயர்க்கக்கூடாது.

குறிப்பாக அது குழந்தைகளை உள்ளடக்கியதாக இருக்கும்போது வருத்தமளிக்கிறது என்று தக்கியூடின் ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset