நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசி மகன் மீது தாக்குதல் நடத்தியவர் போலி எண் பட்டையை பயன்படுத்தியுள்ளார்: போலிஸ்

ஷாஆலம்:

ரபிசி மகன் மீது தாக்குதல் நடத்தியவர் மோட்டார் சைக்கிளில் போலி எண் பட்டையை பயன்படுத்தியுள்ளார்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் இதனை தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் நேற்று முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியின் மகனைத் தாக்கப்பட்டார்.

அவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் போலி பதிவு எண்ணை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள்களில் வந்த இரண்டு நபர்களை தனது துறை கண்காணித்து வருகின்றனர். 

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

ஆனால் சோதனையில் பயன்படுத்தப்பட்ட பதிவு எண் போலியானது என்று கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset