நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா மரண விசாரணையில் குறுக்கீடுகள், வெளிப்புற அழுத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்: சைபுடின் அப்துல்லா

கோலாலம்பூர்:

ஷாரா மரண விசாரணையில் குறுக்கீடுகள், வெளிப்புற அழுத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

தேசியக் கூட்டணி கல்வி இலாகா தலைவர் டத்தோஶ்ரீ சைபுடின் அப்துல்லா இதனை கூறினார்.

ஷாரா கைரினா மகாதீரின் மரணம் குறித்த விசாரணை வெளிப்படையாகவும், நியாயமாகவும், நேர்மையுடனும் நடத்தப்பட்டு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உண்மையை வெளியே கொண்டு வரும்.

சட்ட அமைப்பு,  அமலாக்கத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க நியாயமான நடவடிக்கைகள் தேவை.

இந்த விசாரணை எந்தத் தரப்பினரின் தலையீடு அல்லது அழுத்தம் இல்லாமல் நடத்தப்படும்.

சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் முழுமையான தடயவியல் அறிக்கைகள் உட்பட அனைத்து ஆதாரங்களும் விரிவாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் ஒரு ஊடக அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset