நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐக்கிய அமீரகத்தில் கொடிக்கட்டி பறக்கும் 11 இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் மலேசியாவில் கௌரவிக்கப்பட்டனர்

கோலாலம்பூர்:

ஐக்கிய வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் 11 இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர்.

துபாயில் பல்வேறு தொழில் துறைகளில் சாதித்து வரும் வர்த்தக ஜாம்பவான் செய்யத் எம் சலாவூத்தீன் மலேசியா வந்துள்ளார்.

அவருடன் இணைந்து டாக்டர் அன்சாரி அடீப் குருப், ஹபிப் ஜுனாய்ட் ராடிண்ட் ஸ்டார் குருப், ஷாகுல் ஹமித் நோபல் மரைன் குருப், முஹம்மத் எஹ்யா பிளாக் துலிப் குருப், ஏஜே கமால் அலைட் மோட்டார், முஹம்மத் ஜாஹிர் ஹுசைன் பவர் குருப், வசீர் ஹுசைன் அடிப் குருப், அப்துல் வாஜித் ஒய்ட் ஹவூஸ், முஹம்மத் எலியாட் ஒய்ட் ஹவூஸ், டாக்டர் முஹம்மத் ஃபசுல் ஜெஃப்ரி அல்பா குளோபல் ஆகியோரும் மலேசியா வந்துள்ளனர்.

இவர்களுடனான சிறப்பு செய்து கௌரவிக்கும் சந்திப்பு நிகழ்வு இன்று தலைநகரில் நடைபெற்றது.

மிம்காய்ன், முக்மின் அமைப்பின் ஒத்துழைப்பில்  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மிம்காய்ன் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித், முக்மின் பிரதிநிதி டத்தோ வீரா ஷாகுல் தாவூத், நீதியரசர் டத்தோ ஸ்ரீ வசீர் ஆலம், இஸ்லாமியக் கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் உட்பட மலேசியாவின் வர்த்தகர்களும் முக்கியப் பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக துபாயின் அனைத்து வர்த்தக ஜாம்பவான்கள் 11 பேர் இன்றைய விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset