நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசி மகனுக்கு எதிரான தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும்: பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர்:

ரபிசி மகனுக்கு எதிரான தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உத்தரவை விடுத்தார்.

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியின் மகனுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுவொரு தீங்கிழைக்கும், துரோக செயலாகும்.

ஆக இது குறித்து வெளிப்படையான, விரைவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளிகளில் நடக்கும் பகடிவதை பிரச்சினையிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை.

அதற்குள் இப்போது மற்றொரு வருந்தத்தக்க சம்பவம் நடந்துள்ளது என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் ரபிசி, அவரது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset