நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நடிகர் பர்வின் நாயர் மரணமடைந்த  பெடரல் நெடுஞ்சாலை விபத்து தொடர்பான டேஷ்கேம் காட்சிகளுடன் சாட்சிகள் முன்வருமாறு குடும்பத்தினர் வலியுறுத்து

கோலாலம்பூர்:

நடிகர் பர்வின் நாயர் மரணமடைந்த பெடரல் நெடுஞ்சாலை விபத்து தொடர்பான டேஷ்கேம் காட்சிகளுடன் சாட்சிகள் முன்வருமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி நடிகரும் பாடகருமான பர்வின் நாயர் சுரேந்திரன் காலமானார்.

இந்த சோகமான செய்தியை இறந்தவரின் சகோதரி யசோதா இன்ஸ்டாகிராமில் பதிவின் மூலம் உறுதிப்படுத்தினார்.

மேலும் கோலாலம்பூருக்குச் செல்லும்  யூஐடிஎம்ம் ஷாஆலம் எல்ஆர்டி  நிலையத்திற்கு அருகிலுள்ள பெடரல் நெடுஞ்சாலையின் 9.9 இல்  நடந்த விபத்தில் அவர் மரணமடைந்துள்ளார்.

 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பர்வின் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக போலிசாரால் உறுதிப்படுத்தப்பட்டது.

பர்வின் நாயரின் மரண விவகாரத்தில் அவரின் குடும்பத்தாரான நாங்கள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளோம்.

குறிப்பாக சம்பவ தினத்தன்று இரவு 8 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடந்த இந்த  விபத்தின் டேஷ்கேம் காட்சிகளை நாங்கள் தேடுகிறோம்.

அந்த விபத்தின் ஆதாரங்களை கொண்டிருப்பவர்கள் தயவு செய்து எங்களுக்கு உதவ வேண்டும் என யசோதா கேட்டு கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset