நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகன் தாக்கப்பட்ட சம்பவம்; ரபிசி, அவரின் மனைவி உட்பட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன: போலிஸ்

ஷாஆலம்:

மகன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ரபிசி, அவரின் மனைவி உட்பட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன.

சிலாங்கூர் மாநில போலிஸ்  தலைவர் டத்தோ ஷசாலி கஹார் இதனை கூறினார்.

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியின் மகன் புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில்  நேற்று தாக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக ஆறு நபர்களிடம் போலிசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

ரபிசி, அவரது மனைவி உள்ளிட்ட நபர்கள் அந்த நபர்களில் அடங்குவர்.

இதுவரை புகார்தாரர் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில், மதியம் 1.45 மணிக்கு வாயை மூடு, தொடர்ந்தால், எய்ட்ஸ் என்று அவரது மனைவிக்கு வந்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தல் செய்தி தொடர்பாக புகாரை தாக்கல் செய்ய ரபிசியிடம் கேட்கப்பட்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset