நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி கழிப்பறையில் வகுப்புத் தோழியை கட்டிப்போட்டு  காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 2 மாணவிகள் மீது குற்றச்சாட்டு

சுங்கைப்பட்டாணி:

பள்ளி கழிப்பறையில் வகுப்புத் தோழியை கட்டிப்போட்டு காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 2 மாணவிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மாதம் இங்குள்ள உயர் நிலைப் பள்ளி கழிப்பறையில் வகுப்புத் தோழியை காயப்படுத்தி கட்டிப் போட்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பெண் மாணவிகள்  சுங்கைபட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

13 வயதுடைய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிபதி முகமது அஸ்லான் பாஸ்ரி முன் தமிழில் குற்றச்சாட்டுகள் ஒன்றாக வாசிக்கப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகளை மறுத்து அவர்கள் விசாரணை கோரியுள்ளனர்.

முதல் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஜூலை 14, மாலை 6.40 மணியளவில் பள்ளியின் கழிப்பறையில் ஒரே வயதுடைய ஒரு மாணவியை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கூட்டாக குற்றம் சாட்டப்பட்டனர்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 மற்றும் பிரிவு 34 இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இரண்டாவது குற்றச்சாட்டில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டவரை ஒரே இடம், நேரம் மற்றும் தேதியில் கூட்டாக அடைத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அதே குற்றவியல் சட்டத்தின் பிரிவு 342 உடன் சேர்த்து வாசிக்கப்பட்ட அதே குற்றவியல் சட்டத்தின் பிரிவு 34 இன் கீழ், குற்றம் சாட்டப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset