நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகன் மீதான தாக்குதல் சில பிரச்சினைகள் குறித்து பேசக்கூடாது என்பதற்கான எச்சரிக்கை: ரபிசி

கோலாலம்பூர்:

என்  மகன் மீதான தாக்குதல், சில பிரச்சினைகள் குறித்து பேசக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாக நான் பார்க்கிறேன்.

முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ராம்லி இதனை கூறினார்.

பொது அரசியல்வாதியாக நான் பணியாற்றிய காலத்தில், இதுபோன்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு எனது குடும்பம் இலக்காக இருப்பது இதுவே முதல் முறை.

சில பிரச்சினைகள் குறித்து பேசக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாக இந்த தாக்குதல் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இதனால் பாதுகாப்பை அதிகரிக்க நான் தொடர் நடவடிக்கைகளை எடுப்பேன்.

அதே நேரத்தில் எந்த அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிய மாட்டேன்.

வழக்கம் போல் எனது கடமைகளைத் தொடர்ந்து செய்வேன் என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக ரபிசியின் மகன் பிற்பகல் 1.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset