நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா மரண வழக்கின் விசாரணை அதிகாரி நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டார்: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

ஷாரா மரண வழக்கில் விசாரணை அதிகாரி  நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டார்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

ஷாரா கைரினா மகாதீரின் மரண வழக்கின் விசாரணை அதிகாரி, மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கோரவில்லை.

இதன் மூலம் அவர் சரியான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.

13 வயதான ஷாராவின் மரணம் சந்தேகத்திற்குரியது. மேலும் பிரேத பரிசோதனை தேவை.

ஷாராவின் தாயார் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்ற உறுதி மொழியில் கையெழுத்திட்டாலும்,

விசாரணை அதிகாரி அதைச் செயல்படுத்த விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று அவர் புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

நிறுவப்பட்ட விசாரணை நடைமுறைகளைப் பின்பற்றாததற்காக விசாரணை அதிகாரி,  அவரது மேற்பார்வையாளர் புக்கிட் அமான் நேர்மை, தரநிலை இணக்கத் துறைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

குறிப்பாக அவர்கள் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset