நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸ் மரணம் தொடர்பில் 22 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன: போலிஸ்

ஜொகூர்பாரு:

சம்சுல் ஹரிஸ் மரணம் தொடர்பில் கிட்டத்தட்ட  22 பேரிடம் போலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்சாத் இதனை தெரிவித்தார்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி ஸ்கூடாய் யூடிஎம்  ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலபேஸ்) கேடட் பயிற்சியாளர் மரணமடைந்தார்.

அவரின் மரணத்தை தொடர்ந்து 22 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வழக்கின் விசாரணையை முடிப்பதற்கு முன்பு முழு பிரேத பரிசோதனை அறிக்கைக்காக  போலிசார் காத்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவரின் முழு பிரேத பரிசோதனை அறிக்கையும் இன்னும் பெறப்படவில்லை.

காரணம் வேதியியல் துறை இன்னும் எடுக்கப்பட்ட மாதிரிகளை பகுப்பாய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

முதல் சிகிச்சை மருத்துவர், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், பயிற்சி கூட்டாளிகள், பயிற்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 22 சாட்சிகளை போலிசார் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset