நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் கூடுதல் உத்தரவு; ஏஜி ஒப்புக்கொண்ட பிறகு செயல்படுத்தப்பட வேண்டும்: ஷாபி

கோலாலம்பூர்:

ஏஜி ஒப்புக்கொண்ட பிறகு நஜிப்பின் கூடுதல் உத்தரவு செயல்படுத்தப்பட வேண்டும்.

மூத்த வழக்கறிஞர் டான்ஶ்ரீ முகமது ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தனது சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டிலேயே அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் உத்தரவு இருப்பதை  அட்டர்னி ஜெனரல் (ஏஜி) ஒப்புக்கொண்டதைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தில் நஜிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஷாஃபி,

மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவு ஆவணம் சரியானதா இல்லையா என்பதை கேள்விக்குட்படுத்தக்கூடாது.

மாமன்னரின் உத்தரவு இருக்கும் வரை, அதை கேள்வி கேட்க முடியாது.

ஆவணம் சரியானதா அல்லது அதன் மீதான முடிவு சரியானதா இல்லையா, அது பொருத்தமற்றது என்று கூறும் சுமார் ஒன்பது வழக்குகள் கூட்டரசு நீதிமன்றத்தில் எங்களிடம் உள்ளன.

அக்கூடுதல் உத்தரவு  செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset