நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா கைரினா மரண வழக்கு: விசாரணைக்கு ஏஜிசி உத்தரவு

கோலாலம்பூர்:

மாணவி  ஷாரா கைரினா மகாதீரின் மரணம் குறித்து விசாரணை நடத்த சட்டத் துறை அலுவலகம் (ஏஜிசி) இன்று முடிவு செய்துள்ளது.

இன்று மாலை அதிகாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், காவல்துறை தயாரித்த விசாரணை அறிக்கையை மதிப்பாய்வு செய்ததாக ஏஜிசி தெரிவித்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் துணைப்பிரிவு 339 (1) இன் கீழ் உள்ள விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஷாரா கைரினாவின் மரணத்தில் குற்றவியல் கூறுகள் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பதை அடையாளம் காண்பது உட்பட, மரணத்திற்கான காரணம், விதத்தை தீர்மானிப்பதே விசாரணை நடவடிக்கைகள் என்று ஏஜிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டத்தின் விதிகளின்படி, பிரேத பரிசோதனை செயல்முறை சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் பிரேத பரிசோதனை நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று துறை மேலும் கூறியது.

முன்னதாக மாணவி ஷாரா கைரினா  கடந்த ஜூலை 16 அன்று பாப்பரில் உள்ள அவரது பள்ளி விடுதியின் கீழ் தளத்தில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.

மேலும் ஒரு நாள் கழித்து கோத்தா கினாபாலுவில் உள்ள ராணி எலிசபெத் I மருத்துவமனையில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset