நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸ் மரணத்தில் துஷ்பிரயோகத்தின் அம்சங்கள் இல்லை: காலிட் நோர்டின்

கோலாலம்பூர்:

யூடிஎம் ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (PALAPES) கேடட் அதிகாரியின் மரணம் தொடர்பான விசாரணைக் குழு, இந்த சம்பவத்தில் துஷ்பிரயோகத்தின் அம்சங்கள் எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.

தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமது காலித் நோர்டின் இதனை தெரிவித்தார்.

22 வயதான  பாதிக்கப்பட்ட சம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் கடந்த ஜூலை 28 அன்று ஸ்கூடாயில் உள்ள நிலப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது மரணமடைந்தார்.

இம்மரணம் தொடர்பாக மலேசிய ஆயுதப்படை விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தியதில்,  அதிகாரிகள்,  பயிற்சியாளர்கள் உட்பட அனைத்து சாட்சிகளும் பயிற்சி காலத்தில் துஷ்பிரயோக நடத்தை அல்லது நடவடிக்கை எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.

கடந்த ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற பயிற்சிகள் நிர்ணயிக்கப்பட்ட  நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset