நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசிய ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்தது

கோலாலம்பூர்:

மலேசிய ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி ஒரு ரிங்கிட் ரூ 20.78க்கு விற்பனை ஆனது.

அதே நேரத்தில் சிங்கப்பூர் ஒரு வெள்ளி 68 ரூபாய் 7 காசைத் தருகிறது.

இன்று அது சரிந்து ஒரு ரிங்கிட்  நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு 20 ரூபாய் 78 காசானது. அமெரிக்காவின் வரி விதிப்புப் பற்றிய கவலைகள் அதற்குக் காரணமாய் இருக்கலாம் என்று Reuters செய்தி கூறுகிறது.

ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து இந்திய ஏற்றுமதிக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர்  டிரம்ப் அறிவித்தார்.

அதையடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்து 87 ரூபாய் 74 காசாகப் பதிவானது. அன்றைய நாள் ரூபாயின் மதிப்பு 0.2 விழுக்காடு குறைந்தது.

ரூபாயை வலுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தபோதும் அது போதுமானதாக இல்லை என்று வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்க - இந்திய வர்த்தக உடன்பாடுகளில் மேலும் முன்னேற்றம் இல்லை என்றால் ரூபாயின் மதிப்பு இன்னும் சரியலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மலேசிய ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்ததால் மலேசியாவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சற்று கூடுதலாக தங்கள் வீடுகளுக்கு பணம் அனுப்ப முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset