நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டீ கடை கஃபே சமூக கடப்பாடுடன் செயல்படுகிறது

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டீ கடை கஃபே சமூக கடப்பாடுடன் செயல்பட்டு வருகிறது.

அக்கஃபேவின் உரிமையாளர்களான முஹம்மத் ரிஸ்வான், முஹம்மத் அஸ்ரின், நூருல் அமின் ஆகியோர் இதனை கூறினர்.

இந்தியாவில் வீதிக்கு வீதி டீ கடைகள் இருக்கும். மக்கள் சுவையான டீ குடித்து சற்று ஓய்வெடுக்கும் இடமாக இந்த டீ கடைகள் இருந்து வருகின்றன.

இந்த பாணியில் மலேசியாவிலும்சுவை ததும்பும் டீ கடை திறக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமாக இருந்தது.

இந்த அடிப்படையில் தான் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு டீ கடை கஃபே பினாங்கில் தொடங்கப்பட்டது.

மக்களின் மகத்தான ஆதரவை தொடர்ந்து டீ கடை கஃபேவின் மூன்றாவது கிளை தற்போது பிரிக்பீல்ட்ஸ் சென்ட்ரல் விஸ்தாவில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் பாரம்பரிய வடிவமைப்பில் இந்த டீ கடை கஃபே திறக்கப்பட்டுள்ளது.

அதேளையில் மக்கள் விரும்பும் மிகவும் சுவையான டீ, காஃபி, கேக், பிஸ்கட்கள் உட்பட பல உணவுகள் இங்கு வழங்கப்படுகிறது.

மதியம் 1 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை இந்த டீ கடை கஃபே திறந்திருக்கும் என்று அவர்கள் கூறினர்.

முன்னதாக இந்த டீ கடை கஃபேவை கிரீன் பேக்கேட்டின் தலைமை இயக்குநர், தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ வீரா ஷாகுல் தாவூத் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவை முன்னிட்டு செந்தூல் தம்புசாமி தமிழ்ப்பள்ளி, பிரிக்பீல்ட்ஸ் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

டீ கடை கஃபேவின் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் இந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டன என்று அவர்கள் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன்  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset