
செய்திகள் மலேசியா
13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் ஊழலை தடுக்க எம்ஏசிசி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்: அஸாம் பாக்கி
புத்ராஜெயா:
13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் ஊழலை தடுக்க எம்ஏசிசி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஊழல், அரசுப் பண கசிவு, அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்த்து தொடர்ந்து போராடும் விதமாக, தங்களது நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும்.
பிரதமர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 13ஆவது மலேசியத் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கைகளை எம்ஏசிசி எடுக்கும்.
அதில், செயல்பாட்டு திறன் மேம்பாடு, பாதுகாப்பு, ஃபோரென்ஸிக் விசாரணைகளை வலுப்படுத்தும்.
சொத்துக்கள் மீட்பு நடவடிக்கைகள், ஊழல் தடுப்பு முன்னெச்சரிக்கைகள் என பல முக்கிய முயற்சிகள் அடங்கும்
மலேசியாவை ஊழலில்லா நாடாக மாற்ற வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்பை எம்ஏசிசி நன்கு புரிந்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
August 2, 2025, 12:41 pm