
செய்திகள் மலேசியா
ஷாரா மரண விவகாரத்தில் வாக்குமூலம் எடுக்கப்பட்ட 60 பேரில் 3 மாணவர்கள் இன்னும் அதே பள்ளியில் படிக்கின்றனர்
கோத்தா கினபாலு:
ஷாரா மரண விவகாரத்தில் வாக்குமூலம் எடுக்கப்பட்ட 60 பேரில் 3 மாணவர்கள் இன்னும் அதே பள்ளியில் படிக்கின்றனர்.
சபா கல்வி இயக்குநர் ரைசின் சைடின் இதனை கூறினார்.
13 வயதான ஷாரா கைரினா மகாதீரின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவரின் மரணம் தொடர்பாக 60 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இதில் மூன்று மாணவர்கள் இன்னும் அதே பள்ளியில் படிக்கின்றனர்.
அம்மூன்று மாணவர்களில் யாரும் பள்ளியிலிருந்து நீக்கப்படவில்லை.
அவர்களுக்கு விஐபிகள், போலிஸ் துறையினருடன் எந்த தொடர்பும் இல்லை.
மேலும் சபா கல்வித் துறை போலிஸ் துறையினருக்கு முழுமையான விசாரணை நடத்த முழு நம்பிக்கை அளித்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக ஷாரா கடந்த ஜூலை 16ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் பாப்பரில் உள்ள ஒரு இஸ்லாமிய சமயப் பள்ளியின் விடுதிக் கட்டிடத்தின் கீழ் ஆபத்தான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
படிவம் 1 மாணவியான அவர் மறுநாள் குயின் எலிசபெத் I மருத்துவமனையில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
August 2, 2025, 12:41 pm