
செய்திகள் மலேசியா
காசாவில் மனிதாபிமானமற்ற பேரழிவை தடுக்க பாலஸ்தீன அரசை நிறுவவதில் மலேசியா உறுதியாக உள்ளது: முஹம்மத் ஹசான்
கோலாலம்பூர்:
காசாவில் மனிதாபிமானமற்ற பேரழிவை தடுக்க பாலஸ்தீன அரசை நிறுவவதில் மலேசியா உறுதியாக உள்ளது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.
இஸ்ரேலிய ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட இடைவிடாத படுகொலைகள், இன அழிப்பு காரணமாக காசாவில் நடந்து வரும் மனிதாபிமான பேரழிவு குறித்து மலேசியா கவலை தெரிவிக்கிறது.
கடந்த 2023 அக்டோபர் முதல் 60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 150,000 பேர் காயமடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் இஸ்ரேலிய தொடர்ச்சியான வன்முறை காரணமாக 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
கடந்த 22 மாதங்களாக உலகம் அமைதியாகக் கண்டு வரும் மோசமான மனிதாபிமான நெருக்கடி குறித்து மலேசியாவும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
குறிப்பாக பசி, ஊட்டச்சத்து குறைபாடு தற்போது ஆயிரக்கணக்கான பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகளைப் பாதித்துள்ளது.
மேலும் அதிகரித்து வரும் பஞ்சம் குறித்து இந்த வளர்ச்சி அவசர கவலைகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக 2025ஆம் தேதி மே மாத பிற்பகுதியிலிருந்து, காசா மனிதாபிமான அறக்கட்டளையின் உதவி பெற வரிசையில் நின்ற 1,300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொடூரமாகக் கொன்றது அர்த்தமற்றது.
ஆக பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
August 2, 2025, 12:41 pm