
செய்திகள் மலேசியா
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முதல் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யாவிற்கு செல்கிறார்
கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முதல் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யாவிற்கு செல்கிறார்.
இஸ்தானா நெகாரா ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை அறிவித்தது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் மாமன்னர் அந்நாட்டிற்கு செல்கிறார்.
வரும் ஆகஸ்ட் 5 முதல் 10 வரை மாமன்னர் ரஷ்யாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார்.
1967 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து,
ரஷ்யாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் முதல் மலேசிய மாமன்னர் என வரலாற்றை அவர் படைப்பார்.
இந்த பயணம் நாட்டின் ராஜதந்திரத்தின் முக்கிய பங்கையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm