
செய்திகள் மலேசியா
மஇகாவின் எதிர்காலம், சமுதாயத்தின் நலன் கருதி எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த மஇகா தயார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
சுங்கை சிப்புட்:
மஇகாவின் எதிர்காலம், சமுதாயத்தின் நலன் கருதி எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த மஇகா தயாராக உள்ளது.
அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் திட்டவட்டமாக அறிவித்தார்.
தேசிய முன்னணி, அம்னோவுடன் ஆரம்பத்தில் இருந்து மஇகா இருக்கிறது.
தற்போது ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கும் மஇகா முக்கிய காரணமாக உள்ளது.
இதற்காக மஇகாவுக்கு எல்லாம் எளிமையாக கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் போராடி தான் மஇகா பெற்றது.
அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மஇகா பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும் மஇகா குறித்து தொடர்ந்து பல கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆகவே மஇகாவின் எதிர்காலம், சமுதாயத்தின் நலன் கருதி எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த மஇகா தயாராகி விட்டது.
இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று பேரா மாநில மஇகா கூட்டத்தில் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
August 2, 2025, 12:41 pm