
செய்திகள் மலேசியா
இந்தியர்களின் நலனையும் உரிமையையும் காக்க மஇகா போல் ஒரு கட்சி இருக்கவும் முடியாது இருக்க போவதும் இல்லை: டான்ஸ்ரீ ராமசாமி
சுங்கை சிப்புட்:
இந்தியர்களின் நலனையும் உரிமையையும் காக்க மஇகா போல் ஒரு கட்சி இருக்கவும் முடியாது; இனி இருக்க போவதும் இல்லை.
பேரா மாநில மஇகா தலைவரும் தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ ராமசாமி இதனை கூறினார்.
பேரா மாநில மஇகாவின் 79ஆவது பேராளர் மாநாடு சுங்கை சிப்புட்டில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் பேசிய அவர், இந்த நாட்டில் உள்ள இந்தியர்கள் மஇகா தான் தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வருகிறது.
இப்போது கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் சமுதாயத்திற்கான நலனில் தான் அக்கறை செலுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட தலைவர்கள்தான் நமக்கு எப்போதும் தேவை.
குறிப்பாக இந்தியர்களின் நலனையும் உரிமையையும் காக்கும் ஒரே கட்சி மஇகா தான்.
இதுபோன்ற கட்சியும் இருக்கவும் முடியாது இருக்க போவதும் இல்லை. இது வரலாறு.
ஆக இந்திய சமுதாயம் தொடர்ந்து மஇகாவுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தர வேண்டும் என்று டான்ஸ்ரீ ராமசாமி கூறினார்.
மஇகா இன்னும் வலுப்பெற கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
குறிப்பாக அதிகமான இளைஞர்கள் கட்சியில் இணைய வேண்டும்.
அதற்கான முயற்சிகளை பேரா மாநில மஇகா மேற்கொள்ளும்.
அதே வேளையில் மஇகா தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கும் முயற்சிக்கும் பேரா மாநில மஇகா துணை நிற்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
August 2, 2025, 12:41 pm