நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ சரவணனின் ஆதங்கம் எங்கள் குடும்ப பிரச்சினை; யாரும் தலையிட வேண்டாம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

சுங்கைசிப்புட்:

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் வெளிப்படுத்திய ஆதங்கம் என்பது எங்கள் குடும்ப பிரச்சினை.

அதில் யாரும் தலையிட வேண்டாம் என்று கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.

இன்றைய ஒற்றுமை அரசாங்கம் அமைந்ததற்கு  மஇகாவும் ஒரு முக்கிய காரனமாகும்.

ஆனால் மஇகாவும் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து டத்தோஸ்ரீ சரவணன் கூறியிருந்தார்.

உடனே ஜசெகவைச் சேர்ந்த ஒருவர் வாய்க்கு வந்தது எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.

என்னை பொறுத்தவரையில் டத்தோஸ்ரீ சரவணனின் ஆதங்கம் என்பது எங்கள் குடும்ப பிரச்சினை.

அதில் நீங்கள் ஏன் தலையிட வேண்டும்.  தலையிட கோரி நாங்கள் கேட்டோமோ?

இது எல்லாம் தேவையில்லாத பிரச்சினையாகும் என்று பேரா மாநில மஇகா மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

எதற்கு எடுத்தாலும் 60 ஆண்டுகள் மஇகா என்ன செய்தது என கேட்கிறார்கள்.

மஇகாவின் முயற்சி எடுக்காமலா இந்த நாட்டில் இந்தியர்களுக்கு எல்லாம் கிடைத்ததா?

ஆக வரலாறு தெரியாமல் யாரும் பேச வேண்டாம்.

குறிப்பாக நாம் என்ன சொன்னாலும் அது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் தான் உள்ளது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset