
செய்திகள் மலேசியா
ஆந்திர அரசு நமது முதலீடுகளை எதிர்பார்க்கின்றது; வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வோம்: ஆந்திர அமைச்சர் வரவேற்பு நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு
புத்ரா ஜெயா:
ஆந்திரப் பிரதேச மாநில அரசின்
நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர், மாண்புமிகு அமைச்சர்
டாக்டர் பொங்குரு நாராயணா அவர்களுக்கும் ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்திய மேம்பாட்டு ஆணையர் (APCRDA) கே. கண்ண பாபு, ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் இன்று புத்ரா ஜெயாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக இந்திய விருந்தினர்களையும் முக்கிய பிரமுகர்களையும் வரவேற்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் உரையாற்றினார். வந்திருக்கும் இந்திய அமைச்சர் பல நல்ல திட்டங்களோடு வந்திருக்கிறார். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அமைச்சர் டாக்டர் பொங்குரு நாராயணா உரையாற்றுகையில் தான் இதற்கு முன்பும் மலேசியா வந்துள்ளதாகவும் புத்ரா ஜெயாவின் உள் கட்டமைப்பும் வளர்ச்சியும் தம்மை வியப்பில் ஆழ்த்துவதாகவும் கூறினார். மலேசியர்கள் தங்களது மாநிலத்தில் முதலீடு செய்யவும் வர்த்தகம் செய்யவும் தாராளமாக வரலாம். எங்கள் மாநில அரசாங்கம் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு, நாம் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நமது முதலீடுகளை எதிர்பார்க்கின்றார்கள். இன்று உலக வர்த்தக சந்தையில் இந்தியா மிகப் பெரும் இடத்தில் உள்ளது. என்னுடைய தலைமையில் ஒர் அணி அமைத்து நேரில் சென்று பார்த்து வாய்ப்புகளைப் பெற முடியும் என்று நான் எண்ணுகிறேன். இது சம்பந்தமாக மாநில் முதல்வரிடம் கலந்து பேசி சிறப்பான் முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- ஃபிதா - படம்:கார்த்திக்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
August 2, 2025, 12:41 pm