
செய்திகள் மலேசியா
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
கோலாலம்பூர்:
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை.
முன்னாள் மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் இதனை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமரின் மகன்களான டான்ஸ்ரீ மொக்ஸானி, மிர்சான் முன்பு செய்த அறிவிப்புகளில் எம்ஏசிசி திருப்தி அடைந்துள்ளது.
ஒருவேளை எம்ஏசிசி இந்த விவகாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினால் அது சட்டத்துறை தலைவர் அலுவலகத்திறகு கொண்டு செல்லப்படும்.
அதன் பின் அவரவர் வழக்கறிஞர்கள் சட்டப்பூர்வ பாத்திரங்களை ஏற்பார்கள்.
ஆக மிகவும் முரண்பாடான அறிக்கைகளுடன் ஒரே பக்கத்தில் இருக்க நம்பகமான பிரதமர் தேவையில்லை.
நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி.
அவ்வகையில் பிரதமரின் அறிக்கை எம்ஏசிசி, நீதிமன்றத்தின் அதிகாரம் பங்கிற்கு முந்தியுள்ளது.
இந்த அறிக்கை விசாரணையில் உள்ள வழக்கை பாரபட்சமாகக் கருதுகிறது, அதிகார துஷ்பிரயோகத்தை உள்ளடக்கியது என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:41 pm