
செய்திகள் மலேசியா
நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிக்கும் எண்ணம் இருந்தால் பகாங் மாநிலத்திலிருந்து வெளியேறுங்கள்: அல்-சுல்தான் அப்துல்லா
குவாந்தான்:
நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிக்கும் எண்ணம் இருந்தால் பகாங் மாநிலத்திலிருந்து வெளியேறுங்கள்.
பகாங் மாநில சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் இதனை வலியுறுத்தினார்.
பகாங் மாநிலத்தில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்.
அது தொடர்ந்து நான் நிச்சயம் குரல் கொடுப்பேன்.
அதே வேளையில் இந்த முயற்சிகளை தடுப்பதற்கு மக்களிடமிருந்து உரிய தகவல்கள் கிடைக்க வேண்டும்.
மேலும் மாவட்ட, நில அலுவலகங்கள், மாநில வனத்துறையின் பணிகள் உட்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்று அவர் கூறினார்
ரவூப், கேமரன் மலைகளில் மட்டுமல்ல, பகாங்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்பு ஏற்படும்போது நான் குரல் கொடுப்பேன்.
ஆனால் அதை நானே செய்ய முடியாது. மக்கள் எனது அலுவலகத்திற்கும் அரசாங்கத்திற்கும் தகவல்களை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
அவர்கள் தகவல்களை வழங்கவில்லை என்றால், கண்காணிப்பது கடினமாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
August 2, 2025, 12:41 pm