
செய்திகள் மலேசியா
காணாமல் போனதாக நம்பப்படும் பெண் ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார்
கோல நெராங்:
காணாமல் போனதாக நம்பப்படும் பெண் ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார்.
கோலா நெராங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவரும், உதவி தீயணைப்பு கண்காணிப்பாளருமான முஹம்மத் அமினுடின் மத் கோசாலி இதனை கூறினார்.
நேற்று முதல் கம்போங் பினாங், பெடுவில் உள்ள டெக்கி நெடுஞ்சாலை பாலம் அருகே பெண் ஒருவர் காணாமல் போனதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெராம் டோக் தின் பகுதியில் அப் பெண் மூழ்கி இறந்து கிடந்தார்.
32 வயதான அப்ப்பெண்ணின் உடலை அப்பகுதியில் முகாமிட்டிருந்த பொதுமக்கள் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
தீயணைப்புப் படையினர், ஆறு பேர் கொண்ட குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்று இரவு 10 மணியளவில் பாதிக்கப்பட்டவரைக் கரைக்குக் கொண்டு வந்தனர் என்று அவர் கூறினார்.
முன்னதாக நேற்று இங்குள்ள டெக்கி நெடுஞ்சாலைப் பாலத்தில் ஆற்றில் விழுந்ததில் ஒரு பெண் காணாமல் போனதாகவும், நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
August 2, 2025, 12:41 pm