நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: 

மலேசிய பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) சில நாடுகள்மீது முன்னதாக அறிவித்திருந்த தீர்வைகளில் மாற்றம் செய்யும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

இதன் மூலம் மலேசியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள்மீதான தீர்வை 25 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மலேசிய அரசு டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் உறுதி அளித்துள்ளார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset