நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13ஆவது மலேசியா திட்டத்திற்காக அரசாங்கம் 611 பில்லியன் ரிங்கிட்டை  ஒதுக்கியுள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

13ஆவது மலேசியத் திட்டத்தின்  வெற்றிக்காக அரசாங்கம் மொத்தம் 611  பில்லியன் ரிங்கிட்டை  ஒதுக்கியுள்ளது.

இதில் 430 பில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதியை உள்ளடக்கியது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

120 பில்லியன் ரிங்கிட் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட ஜிஎல்சி  நிறுவனங்கள்,  அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் ஜிஎல்ஐசி மூலம் நிதியளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் 61 பில்லியன் ரிங்கிட்  பொது, தனியார் கூட்டாண்மை முறை மூலம் நிதியளிக்கப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூணாக பொருளாதாரத் துறைக்கு 227 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூகத் துறைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு 133 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கல்விக்கு 67 பில்லியன் ரிங்கிட்,  சுகாதாரத்திற்கு 40 பில்லியன் ரிங்கிட்டும்  அடங்கும்.

பாதுகாப்புத் துறைக்கு 51 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் துறைக்கு 17 பில்லியன் ரிங்கிட் வழங்கப்படும்.

இந்த மூலோபாய ஒதுக்கீடு விரிவான, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மக்களவையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset