செய்திகள் மலேசியா
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
பெட்டாலிங்ஜெயா:
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்.
அந்நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் இதனை கூறினார்.
கடந்த 1982ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஶ்ரீ முருகன் நிலையம் இது வரையிலும் 30,000க்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரிகளை உருவாகக் காரணமாக இருந்துள்ளது.
இந்த நாட்டில் இந்தியர்கள் கல்வி மூலமாகவே முன்னேறி வெற்றியடைய முடியும்.
இதற்கான உந்துசக்தியும் தன்முனைப்பும் நமது சமயம், இந்திய பாரம்பரியத்தில் உள்ளது.
நமது இந்து சமயமும், பாரம்பரியமும் மனிதனை நிலையான வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடியது.
மேலும் இந்த சாதனைக்கு கல்வியுடன் கூடிய சமயமும் முக்கிய காரணமாக உள்ளது.
குறிப்பாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி விரதம், யாத்திரை மாணவர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.
இதன் அடிப்படையில் தான் 31ஆவது ஆண்டாக கல்வி யாத்திரை நடைபெறவுள்ளது.
இந்த கல்வி யாத்திரை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலையில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதிலும் 8 மாநிலங்களில் இருந்து 5,000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஸ்ரீ முருகன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
அதே வேளையில் தனிப்பட்ட முறையிலும் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆகவே அனைவரும் திரளாக வந்து இந்த யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் என ஸ்ரீ கணேஷ் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
