நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13ஆவது மலேசியத் திட்டம் மடானி பொருளாதார திட்டத்திற்கு ஏற்ப இந்திய சமூகத்தை மேம்படுத்துகிறது: டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

நாட்டில் 13ஆவது மலேசியத் திட்டம் மடானி பொருளாதார திட்டத்திற்கு ஏற்ப இந்திய சமூகத்தை மேம்படுத்துகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் தாக்க செய்தார்.

இத்திட்டம் இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார தரத்தை உயர்த்துவதில் குறிப்பிட்ட முக்கியத்துவத்தை வழங்குகிறது.

இது ஒரு ஒருங்கிணைந்த விரிவான அணுகுமுறையை வலியுறுத்தும் மடானி கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது.

மலேசிய இந்திய புளூ பிரிண்ட்,  இந்திய சமூக செயல் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம்  இந்திய சமூகத்தின்,  குறிப்பாக குறைந்த வருமானக் குழுவிலிருந்து வரும் மக்களின் வாழ்க்கைத் தரம், சமூக இயக்கத்தை மேம்படுத்துவதற்காக இத்திட்டம்  வரைவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் தொடரப்படும் தற்போதைய திட்டங்களில் இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமும் அடங்கும்.

13ஆவது மலேசியத் திட்டத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு, வீட்டு பழுதுபார்ப்பு மற்றும் வீட்டுவசதி அணுகலை மேம்படுத்துவதோடு, ஸ்டேம், திவேட், துறைகள், தொழில் வாய்ப்புகள் உட்பட திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset