நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்

கோலாலம்பூர்:

நாட்டில்  5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்.

மக்களவையில் 13ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

13ஆவது மலேசியா திட்டத்தில் நாட்டின் கல்வித் துறைக்கு அரசாங்கம் 67 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும்.

புதிய பள்ளிகளைக் கட்டுதல், கெமாஸ் உள்ளிட்ட பள்ளிக் கட்டிடங்களை பழுதுபார்த்தல், மேம்படுத்துதல், பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கான வசதிகள் ஆகியவை ஒதுக்கீட்டில் அடங்கும்.

அதே வேளையில் ஐந்து வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும். தற்போது அது ஆறு வயதாக உள்ளது.

அரசாங்கம் உகந்த பள்ளி நேரங்களை மறுஆய்வு செய்து சிறப்புப் பள்ளிகளின் செயல்திறனை மதிப்பிடும் என்று கூறினார்.

கல்வி முடிவுகளை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளில், புத்திசாலி, திறமையான மாணவர்களுக்கான கல்வி மாதிரியையும் அரசாங்கம் மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset