நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா

பெட்டாலிங்ஜெயா:

இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வியாத்திரைக்கு உண்டு.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா  இதனை தெரிவித்தார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 31ஆவது கல்வி யாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த யாத்திரைக்கான தொண்டூழியர்கள் பெற்றோர்களுக்கான சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இம்முறை 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனால் அனைத்து ஏற்பாடுகளும் முறையாக இருக்க வேண்டும் என்பதே ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலக்காகும்.

மேலும் அனைத்து மாணவர்களும் பெற்றோரும் ஒரே சிந்தனையுடன் இந்த கல்வி யாத்திரையில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனால் இந்த யாத்திரையில் முருகப் பெருமான் கலந்து கொள்வதுடன் ஆசியும் வழங்குவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

மேலும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநரும் கல்வி தந்தையுமான டான்ஸ்ரீ தம்பிராஜாவின் ஆசியும் மாணவர்களுக்கு கிடைக்கவுள்ளது.

ஆககே இவ்வாண்டு கல்வி யாத்திரை மிகப் பெரிய சக்தியுடனும் ஆசியுடமும் நடைபெறவுள்ளது.

மாணவர்களும் பிள்ளைகளும் கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த கல்வியாத்திரை உட்பட அனைத்தும் நடத்தப்படுகிறது.

ஆக இக்கல்வி யாத்திரை இந்திய சமுதாயத்திடையே மிகப் பெரிய உருமாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

ஆகவே அனைவரும் திரளாக இந்த கல்வியாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் என சுரேன் கந்தா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset