நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்

கோலாலம்பூர்:

எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை மடானி  அரசாங்கம் தொடரும்.

13ஆவது மலேசியத் திட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தேசியத் திட்டமான 13ஆவது மலேசியா திட்டத்தில் இந்த உதவி முயற்சிகளை அரசாங்கம் தொடரும்.

மேலும் மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற  ரஹ்மா விற்பனைத் திட்டம், கஃபே ரஹ்மான், ரஹ்மா உதவிப் பொருட்கள் போன்ற முக்கிய திட்டங்களை அரசாங்கம் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

அதே நேரத்தில், விநியோகச் சங்கிலியில் விலை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக,

அரசாங்கம் உணவு விலைகளைக் கண்காணித்தல் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset