நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்

கோலாலம்பூர்:

தூக்கத்தில் இருந்து திடீரென விழித்துக் கொண்ட அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ புவாட் ஸர்காசி  ஹீரோவாக விரும்புவார்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இவ்வாறு சாடினார்.

தேசிய முன்னணி, அரசாங்கத்தின் மீதான அதிருப்திகள் குறிப்பாக மஇகாவுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அண்மையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசினேன்.

இந்த விவகாரம் குறித்து தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி பதிலளித்து விட்டார்.

ஆனால், இப்போது தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட புவார் திடீரென இது குறித்து பேசி ஹீரோவாக விரும்புகிறார்போலும்.

மேலும் உங்கள் கருத்துகளைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சைபர் துருப்புக்கள் மட்டுமே உங்களை ஆதரிக்கிறார்கள்.

அதே வேளையில் உங்கள் கட்சியும் மலாய்க்காரர்களால் நிராகரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை?

குறிப்பாக தேசியக் கூட்டணி அனைத்து மலாய் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இது உங்களுக்கு தெரியாதா?.

நீங்கள் சொல்வது போல் மஇகா ஒரு நாடாளுமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளது.

ஒருவேளை மஇகா, மசீச இல்லாமல் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடட்டும்.

இப்போது இருக்கின்றன 26 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளை உங்கள் கட்சியால் வெல்ல முடியும் என்பதை பார்ப்போம். 

முகநூலில் புவாட்டின் அறிக்கைக்கு பதிலளித்த டத்தோஶ்ரீ சரவணன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset