
செய்திகள் மலேசியா
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
கோலாலம்பூர்:
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சர் ஃபட்சினா சிடேக்கிற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மஇகா உதவித் தலைவரும் கல்விக் குழு தலைவருமான டத்தோ நெல்சன் ரெங்கநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
ஆரம்பக் கல்விக்கும் உயர்நிலைக் கல்விக்கும் பாலமாக அமைந்துள்ள இடைநிலைப் பள்ளி கல்வியை தான்.
இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது பல மாணவர்கள் பாதியில் நின்று விடுகின்ற நிலை காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.
இதற்கு சில நியாயமான காரணங்கள் இருந்தாலும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு அது மிகப் பெரிய பாதிப்பாகும்.
அதேவேளை இது குறித்து அரசத் தரப்பில் கேட்பாரும் மேய்ப்பாரும் இல்லை என்ற நிலை நிலவுவதால் இத்தகையப் போக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக கடந்த ஆண்டு ஏறக்குறைய 15 ஆயிரம் மாணவர்கள் தங்களுக்கான எஸ்பிஎம் தேர்வில் அமரவில்லை என்பது மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது.
இந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 10 விழுக்காட்டு மாணவர்கள் இந்திய சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
இதில் ஏறக்குறைய 1,500 இந்திய மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதாமல் தவிர்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருக்கக்கூடும்
இப்படிப்பட்ட மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்திலிருந்து விலகி நிற்பதுடன் தங்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிக் கொள்கின்றனர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நான் மேலவை உறுப்பினராக சேவையாற்றிய காலத்தில் ஆரம்பக் கல்வியை கட்டாயம் ஆக்கியதைப் போல இடைநிலைக் கல்வியையும் கட்டாயமாக்க வேண்டும் என்று பல கட்டத்தில் வலியுறுத்தினேன்.
இதுகுறித்து அரசத் தரப்பில், குறிப்பாக கல்வி அமைச்சகத்தின் சார்பில் ஆலோசிக்கப்படும். பரிசீலிக்கப்படுகிறது என்ற மட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டதேத் தவிர விரைவான முடிவு எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று மடாணி அரசாங்கத்தின் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக், ஆரம்பக் கல்வியைப் போல இடைநிலை கல்வியும் கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவு மிகவும் பொருத்தமான முடிவு என்றும் இடைநிலைக் கல்வியை பாதியில் நிறுத்துகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருப்பது அதைவிட சிறந்த முடிவு என்று முன்னாள் செனட்டருமான டத்தோ நெல்சன் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 11:41 am
சிறுவன் தேவக்ஷேனின் கொலை வழக்கில் தந்தையின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு: போலிஸ்
August 1, 2025, 11:31 am
13ஆவது மலேசியத் திட்டத்தில் அசாதாரணமானது எதுவுமில்லை: இராமசாமி
August 1, 2025, 9:47 am
இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு 13ஆவது மலேசியத் திட்டம் திருப்புமுனையாக அமையும்: ஹேமலா
August 1, 2025, 8:13 am
மலேசிய பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
August 1, 2025, 7:04 am
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm