நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிரட்டல்களுக்கான ஆதாரங்கள் இருந்தால் துளசி போலிஸ் புகார் செய்ய பேரா மஇகா இளைஞர் பிரிவு துணையாக இருக்கும்: தியாகேஸ்

ஈப்போ:

மிரட்டல்களுக்கான ஆதாரங்கள் இருந்தால் துளசி போலிஸ் புகார் செய்ய பேரா மஇகா இளைஞர் பிரிவு துணையாக இருக்கும்.

பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தியாகேஸ் கணேசன் கூறினார்.

மஇகாவுக்கும் அதன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணக்கும் எதிராக பேசியதால் பல மிரட்டல்கள் வந்தன.

குறிப்பாக மன்னிப்பு கேட்க சொல்லி இந்த மிரட்டல்கள் வந்தன என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் கூறினார்.

துளசி கூறியது உண்மை என்றால் குறிப்பாக அதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர் தாராளமாக போலிஸ் புகார் செய்யலாம்.

அதற்கு பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவு துணையாக இருக்கும்.

ஆனால் உண்மை இல்லையென்றால் அவர் உடனடியாக மலிவான மலிவான விளம்பரத்தை நிறுத்துக் கொள்ள வேண்டும் என்று தியாகேஸ் வலியுறுத்தினார்.

பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவு, ஒற்றுமை அரசாங்கத்துடனான சட்டமன்ற உறுப்பினர் துளசியின் ஒற்றுமை உணர்வை ஒருபோதும் விமர்சித்ததில்லை.

ஆனால் மஇகாவை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset