நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

இந்திய சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் சிறப்புப் பிரிவை உடனடியாக அமைக்க வேண்டும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 13ஆவது மலேசியத் திட்டத்தை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் முன்மொழிந்துள்ள இந்திய சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த மித்ராவுக்கு அப்பால் இரு சிறப்புப் பிரிவை அரசு அமைக்க வேண்டும்.

இந்திய ஆலோசனைக் குழுவின் கீழ் ஒரு நிலையான சமூக, பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவப்பட வேண்டும்.

இது சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் குழுவின் செயலகமாகவும் செயல்படும்.

இந்திய ஆலோசனைக் குழுவின் கீழ் ஒரு தலைமைக் குழுவால் வழிநடத்தப்பட வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 38 முக்கிய பகுதிகளில் சமூகப் பொருளாதார மேம்பாட்டு பிரிவுகள் நிறுவப்பட வேண்டும்.

அவை இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதத்தை உள்ளடக்கிய பகுதிகளாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக இது தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த வேண்டும்.

இந்த பிரிவுகள் உள்ளூர், நகர்ப்புற அரசு நிறுவனங்களில் திறமையான பணியாளர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிமட்ட மட்டத்தில் ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு, முன்னேற்றத்தை இயக்குவதற்கு அரசாங்க சொத்தாக செயல்படும் என்று அவர் கூறினார்.

13ஆவது மலேசியத் திட்டம்,  இந்திய சமூக செயல் திட்டம் 2.0 ஆகியவற்றின் இலக்குகளுக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவதில் மஇகாவின் முன்மொழியப்பட்ட பிரிவு தொடர்ச்சியை உறுதி செய்யும்.

இந்திய சமூகத்தின் எந்தப் பிரிவும் பின் தங்கியிருக்காது என்பதையும், சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப மேம்பாட்டு முயற்சிகள் திறமையாகவும், வெளிப்படையாகவும், பதிலளிக்கும் விதமாகவும் செயல்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும்.

இந்த செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம்,  அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்ற மஇகா தயாராக உள்ளது.

இதன் மூலம் மலேசிய இந்திய சமூகத்தினருக்கு நியாயமான, சமமான, வளமான எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையை மேம்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset