நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்: பிரதமர்

கோலாலம்பூர்:

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் தொலைபேசி வாயிலாக பேசும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பேச்சுவார்த்தையில் தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தம் விவகாரத்தில் மலேசியாவின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.

மேலும் அமெரிக்காவின் வரி கொள்கை மலேசியாவுக்கு சுமையாக இருக்காது எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

குறிப்பாக அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளவும் அமெரிக்க அதிபர் உறுதி அளித்துள்ளார்.

மக்களவையில் 13ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்த போது பிரதமர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset