நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை, ஒருங்கிணைப்பு, ஆய்வு அடிப்படையில் பிரதமர் இலாகா செயல்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர்: 
மித்ரா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை, ஒருங்கிணைப்பு ஆய்வு அடிப்படையில் பிரதமர் இலாகா செயல்படுகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மித்ராவின் ஒவ்வொரு ஒப்புதலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக பிரதமர் இலாகா ஒருங்கிணைப்பு, ஆய்வு செயல்முறையின் வழியாக செல்கிறது.

ஒவ்வொரு விண்ணப்பமும் பிரதமர் துறையின் கண்காணிப்பு, நிதி, ஒருமைப்பாடு பிரிவுகளின் ஆய்வு செயல்முறையின் வழியாகவும் செல்கிறது.

இந்திய சமூகத்தின், குறிப்பாக பி40 குழுவின் நம்பிக்கைகளை உறுதி செய்வதற்காக வெளிப்படையான விநியோக முறையை உறுதி செய்வதற்காக,

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தானே அனைத்து திட்டங்களையும் முன்னேற்றங்களையும் நேரடியாகக் கண்காணிக்கிறார்.

எனவே, பிரதமர் இலாகாவால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும், உண்மைகளின் அடிப்படையில் மித்ரா உள்ளிட்ட பல்வேறு அமைச்சுகள், நிறுவனங்களின் உள்ளீடுகள் உட்பட கவனமாக ஒருங்கிணைக்கப்படுகிறது.

மேலும் இந்திய சமூகத்திற்கு உதவுவதற்காக ஒதுக்கப்படும் அரசு நிதி, சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.

இதில் மற்ற அரசு நிறுவனங்களுடனான போட்டி அம்சங்கள் இருக்கக் கூடாது என்பதை பிரதமர் உறுதி செய்ய விரும்புகிறார்.

இதன் அடிப்படையிலேயே பல நடவடிக்கைகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திய சமூகத்தின் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை கொண்டுள்ள டத்தோஶ்ரீ ரமணன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset