நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பழைய உலோகப் பொருள் கடத்தல்:  28 நிறுவனங்களில் சோதனை 300 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல்

கோலாலம்பூர்:

பழைய உலோக பொருளில் கடத்தல் தொடர்பில்  28 நிறுவனங்களில் சோதனை செய்யப்பட்டதுடன் 300 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து மாநிலங்களில் பழைய உலோக பொருள் மின் கழிவுகள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட மொத்தம் 28 நிறுவனங்கள் சோதனைகள் நடத்தப்பட்டன.

அரசாங்கத்திற்கு ஏற்றுமதி வரி வருவாயில் 950 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தின என்ற அடிப்படையில் இச்சோதனைகள் நடத்தப்பட்டன.

கடந்த  ஜூலை 14 முதல் மலேசியன் சுங்கத் துறை, உள்நாட்டு வருவாய் வாரியம், பேங்க் நெகாரா ஆகியவற்றுடன் இணைந்து எம்ஏசிசியின் சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு பல நிறுவன பணிக்குழு மூலம் நடத்திய சோதனைகளின் விளைவாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இன்று வரை 32 பேர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை, எந்த நபரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இன்று வரை வங்கி கணக்கு முடக்கம், சொத்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை 332.5 மில்லியன் ரிங்கிட் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset