நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்

கோலாலம்பூர்:

13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 13ஆவது மலேசியா திட்டத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை பெற்றுக் கொண்டார்,

இதை அவர் நாளை மக்களவையில் தாக்கல் செய்வார்.

இந்த ஆவணம் 2026 முதல் 2030 வரையிலான காலத்திற்கான நாட்டின் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்தைத் தயாரிக்கும் கட்டத்தின் முடிவைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

13ஆவது மலேசியத் திட்டம் எந்தவொரு குழுவையும் ஓரங்கட்டாது.

நியாயமான, சமமான முறையில் மக்களின் கண்ணியத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தும் ஒரு விரிவான வளர்ச்சித் திட்டமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் எதிர்காலத் திட்டமிடலில் மக்களின் குரல்கள் உண்மையிலேயே கேட்கப்படுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset