
செய்திகள் மலேசியா
கென்யாவில் பெரும் இடப்பெயர்வு திட்டத்திற்கான நேஷனல் ஜியாக்ராபிக் ஆய்வாளராக மலேசிய புகைப்படக் கலைஞர் தினேஷ் தேர்வு
கோலாலம்பூர்:
கென்யாவின் மசாய் மாரா தேசிய காப்பகத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்திற்கான நேஷனல் ஜியாக்ராபிக் ஆய்வாளராக மலேசிய புகைப்படக் கலைஞர் தினேஷ் ஸ்ரீதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தான்சானியாவின் செரெங்கேட்டியிலிருந்து மசாய் மாராவின் பசுமையான புல்வெளிகளுக்கு உலகின் மிகப்பெரிய வருடாந்திர நிலப்பரப்பு வனவிலங்குகளின் அற்புதமான பெரிய இடப் பெயர்வை ஆவணப்படுத்துவார்.
காட்டெருமை, வரிக்குதிரைகள், கேசல்கள் ஆகியவை இந்த வனவிலங்குகளில் அடங்கும்.
பெரும் இடப்பெயர்வை ஆவணப்படுத்த நேஷனல் ஜியாக்ராபிக் சங்கத்திற்கு அவர் சமர்ப்பித்த கருத்துருவாக்கம் ஏப்ரல் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
மேலும் அவர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மசாய் மாராவில் களப்பணியைத் தொடங்க உள்ளார்.
இது உச்ச இடப்பெயர்வு காலத்துடன் ஒத்துப்போகிறது.
மசாய் மாரா என்பது பெரும் இடம் பெயர்வின் மையமாகும்.
இது வெறும் படப்பிடிப்புக் காட்சி மட்டுமல்ல, இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான சமநிலையின் சின்னமாகும் என்று 32 வயதான தினேஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm