நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?

கோலாலம்பூர்:

மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நேரடியாக நிதி ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மித்ரா கீழ் 16 உயர் தாக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான பிரதமர் இலாகா அறிவித்துள்ளது.

ஆனால் இது  மித்ரா தலைமை, அதிகாரிகள் மத்தியிலும் கூட தெளிவை விட அதிகமான கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.

மலேசியா கினியிடம் பேசிய குறைந்தது இரண்டு உள் வட்டாரங்களின்படி,

பிரதமர் அலுவலகத்தின் இன்றைய அறிவிப்பு குறித்து அந்த நிறுவனத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.

இது எங்களுக்கு ஆச்சரியமானது என அவர்கள் விவரித்துள்ளனர்.

உங்களைப் போலவே, பிரதமர் அலுவலகத்தின் ஊடக அறிக்கை மூலம் நாங்களும் இந்த விஷயத்தைப் பற்றி அறிந்துகொண்டோம்.

ஆனால், 16 திட்டங்கள் என்ன, அவை எப்போது அங்கீகரிக்கப்பட்டன,  எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியாது.

மித்ராவின் திட்ட ஒப்புதலுக்கான செயல்பாட்டில் ஈடுபட்ட ஒரு வட்டாரம் இதை கூறியது.

அது பிரதமர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset