நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான்:

காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது காதலனின் தாயைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான எம். ஷோப்னா, குற்றப்பத்திரிகை மாஜிஸ்திரேட் நைததுல் அதிரா அஸ்மான் முன் தமிழில் வாசிக்கப்பட்டது.

அப்போது அவர் தலையை மட்டும் அசைத்து புரிந்து கொண்டதாக கூறினர்.

இருப்பினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வந்ததால் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், தாமன் இந்தா ஜெயாவில் உள்ள ஜாலான் டெரடாய் ஜேJ4/1 இல் உள்ள ஒரு வீட்டில் ஒரு அறையில் 66 வயதான எம். சுமதியை கொலை செய்ததாக அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றச்சாட்டு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் சுமத்தப்பட்டது.

துணை அரசு வழக்கறிஞர் நூர் தர்விஸ் அக்னியா ஹலிம் அசிசி வழக்கு தொடர்ந்தார்.

அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.

பின்னர், செப்டம்பர் 11 ஆம் தேதி பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெறுவதற்காக வழக்கை மீண்டும் குறிப்பிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset